விவசாயிகளின் துயர் துடைக்க தேசிய வேளாண்மை மேம்பாட்டு ஆணையம்: விரைவில் அமைக்க மத்திய, மாநில அரசுகளு


இந்தியாவின் முதுகெலும்பு என்று அழைக்கப்பட்டும் விவசாயிகள் நாடு முழுவதும் பல்வேறு நெருக் கடிகளில் சிக்கித் தவித்து வருகின் றனர். அவர்களது துயர் துடைக்கும் வகையில் தேசிய வேளாண்மை மேம்பாட்டு ஆணையம் அமைக்க வேண்டுமென வலியுறுத்தப்படு கிறது. இதுதொடர்பாக கோவையைச் சேர்ந்த மனுநீதி அறக்கட்டளை, மாதிரி திட்டத்தை வடிவமைத்து, மத்திய அரசுக்கு அனுப்பி வைத் துள்ளது. இதை அடிப்படையாகக் கொண்டு, தேசிய வேளாண்மை மேம்பாட்டு ஆணையம் அமைக்க வேண்டுமென கோரிக்கை விடுக் கப்பட்டுள்ளது. அனைத்து மக்களுக்கும் உண வளிக்கும் விவசாயி பட்டினி கிடக் கும் அவலம் இந்தியாவில்தான் நிலவுகிறது. கோவையைச் சேர்ந்த மனுநீதி அறக்கட்டளை, 'விவசாயி கள் மேம்பாடு, இயற்கை விவ சாயம், நீர்நிலை மேம்பாடு, சுற்றுச் சூழல் பாதுகாப்பு' உள்ளிட்டவை தொடர்பாக கடந்த 5 ஆண்டு களுக்கும் மேலாக பல்வேறு ஆய்வு களை நடத்தி வருவதுடன், கள செயல்பாடுகளிலும் ஈடுபட்டுள்ளது. இதுகுறித்து அறக்கட்டளைத் தலைவர் மனுநீதி மாணிக்கம் கூறியதாவது: உழவர்களின் வாழ்வு உயர்ந்து, யாருடைய தயவும் இல்லாமல், சொந்தக் காலில் நிற்கும் நிலையை உருவாக்க வேண்டும். வேளாண் மைக்காக தனி நிதிநிலை அறிக் கையை சமர்ப்பிக்க வேண்டும். நீர் மேலாண்மை மூலம் பாசன நீர் தேவையை தன்னிறைவு அடையச் செய்ய வேண்டும். வங்கிக் கட னுதவி மற்றும் உதவிகள் பெறு வதற்கான நடைமுறைகளை எளி மைப்படுத்த வேண்டும்.

துல்லிய பண்ணைத் தொழில் நுட்பத்தைக் கற்றுக்கொடுத்து, ஓராண்டில் ஒரு ஏக்கருக்கு குறைந்த பட்சம் ரூ.1 லட்சம் லாபம் சம்பாதிக் கச் செய்ய வேண்டும். பயிர்க் காப்பீடு, விளை பொருட்களை சேமிக்க கிடங்குகள், பண்ணைத் தொழிலாளர்களுக்கு இலவச குடியிருப்பு உள்ளிட்டவையும் விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும். இந்த திட்டங்களை செயல்படுத்தவும், விவசாயிகளின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும் தனித்து இயங்கும் ஆணையத்தை உருவாக்க வேண்டும். ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்கு முன்பு, அப்போதைய பிரதமர் வாஜ்பாய், தேசிய நெடுஞ்சாலை வாரியத்தை அமைத்தார். இதன் முக்கியத்துவத்தை தற்போது உணர்கிறோம். இதேபோல, வேளாண்மை மேம்பாட்டு ஆணை யம் விவசாயிகளுக்கு மட்டுமின்றி, அனைத்துத் தரப்பினருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். விவசாயிகளுக்காக மத்திய, மாநில அரசுகள் அறிவிக்கும் திட்டங்களை செயல்படுத்துவதில் உள்ள நடைமுறை சிக்கல்களை இந்த ஆணையம் தீர்த்து வைக்கும். நீர்வளம், உற்பத்தி, விற்பனை, லாபம் ஈட்டல், நுகர்வோருக்கு சீரான விலை என அனைத்திலும் தன்னி றைவை கொண்டுவரச் செய்யும். தோட்டத்துக்குள் தங்கி வேலை பார்க்கும், விவசாயத்தை சார்ந்து இருக்கும் தொழிலாளர்களுக்கு பல்வேறு வசதிகளுடன் கூடிய வீடு கள் கட்டித் தரப்படும். ஆண், பெண் தொழிலாளர்கள் வேறுபாடின்றி குறைந்தபட்சம் ரூ.600 ஊதியம், திறனைப் பொறுத்து அதிகபட்சம் ரூ.1,200 சம்பாதிக்க வழிவகை செய்யப்படும்.

பெரும்பாலான மாநிலங்களில், விவசாயிகளுக்கான மத்திய அரசின் திட்டங்கள் செயல்படுத்தப்படாமல் உள்ளன. பல திட்டங்களுக்கு நிதி இருந்தும், விவசாயிகளைச் சென் றடைவதில்லை. தற்போதுள்ள மாநில, மத்திய அரசு அதிகாரி களிடையே தெளிவான செயல் திட்டம் இல்லாததே இதற்கு கார ணம். இந்தப் பிரச்சினைக்கு இந்த ஆணையம் தீர்வு காணும். செயற்கை உரம் மற்றும் பூச்சி மருந்துக்கு கோடிக்கணக்கில் மானி யம் கொடுத்து, விவசாயிகளுக்கு சலுகை விலையில் வழங்குவதால் நிலம் மலடாகி விட்டது. எனவே, இயற்கை முறை விவசாயத்தை இந்த ஆணையம் ஊக்குவிக்கும். இதற்குத் தேவையான இடுபொரு ளையும் உற்பத்தி செய்து, விவசாயிகளுக்கு வழங்கும். தேசிய அளவில் அமைக்கப் படும் ஆணையத்தைப்போல, மாநில அளவிலும் தமிழ்நாடு விவசாயிகள் மேம்பாட்டு ஆணையத்தை அமைக் கலாம். தமிழக அரசு பல்லாயிரம் கோடி ரூபாயை கடனாகவும், மானியமாகவும் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் கொடுக்கிறது. இருந்தும் விவசாயிகளின் நிலை உயரவில்லை. தற்கொலை முயற்சி கள் தொடர்கின்றன. இதைத் தடுக்க இந்த ஆணையம் உதவும். நீர் மேலாண்மை, வேளாண் உற்பத்தி இலக்கை எட்டவைத்தல், நிரந்தர விலை நிர்ணயம், உள் ளூர் தேவைக்குப்போக மீதமான வற்றை வெளி மாநிலம், வெளி நாடுகளுக்கு அனுப்புதல் ஆகிய வற்றை செயல்படுத்தவும், நவீன இயந்திரங்களின் பயன் பாட்டை அதிகரிக்கவும், நுண்ணு யிர்கள் மூலம் பயிர்களுக்கு எதிரியான பூச்சிகளை விரட்டும் ஆய்வு மேற்கொள்ளவும் இந்த ஆணையம் உதவியாக இருக்கும்.

விவசாய விளை பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்துவதிலும், நுகர்வோருக்கு ஆண்டு முழுவதும் ஒரே விலையில் பொருட்கள் கிடைக்கவும் இந்த ஆணையம் உதவியாக இருக்கும். இதற்காக கடந்த 5 ஆண்டு களாக இயற்கை முறை விவசாயம் உள்ளிட்ட பல்வேறு ஆராய்ச்சி களை மேற்கொண்டோம். இந்த ஆணையத்தை விரைவில் அமைத்து, அதற்கு இலக்கு நிர்ணயித்து செயல்படுத்த பிரதமர் மோடி முன்வருவார் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

"தமிழக ஹிந்து மக்கள் முன்னணி"

0 views0 comments